அரியலூர் ஒன்றியம், கயர்லாபாத் ஊராட்சியில், திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக, உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் கோலப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில பொருளாளர் பெ. சௌந்தரராஜன், மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எஸ் வி சாந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, அப் போட்டிகளில் வென்றவர்கள் மற்றும் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு அரியலூர் மாவட்ட தலைவர் பெ .நாகமுத்து, மாவட்ட மகளிர் நலத்துறை இயக்குநர் கு. மங்கையர்கரசி மற்றும் கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






