மோடி, அமித்ஷாவும் எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தட்டும் அதன் பிறகு முதல்வரை கேட்கலாம். -அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில் கூறி
மதுரையில் மத நல்லிணக்க பொதுக்கூட்டம் பேரணி நடத்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது- திருமாவளவன்

மதுரை வில்லாபுரத்தில் ,முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் விசிக இணைந்து நடத்தும் ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் விசிக திருமாவளவன் பங்கேற்றார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;-
நேற்றிலிருந்து இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருந்து வருகிறார்கள் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.21வது ஆண்டாக நோன்பு இருக்க நான் தொடங்கியுள்ளேன் இன்னும் நான்கு நாட்கள் நோன்பு இருக்க உள்ளேன்.நோன்பு இருப்பது சமூக நல்லிணக்கத்தை பெரும் வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன் வரும் ஐந்தாம் தேதி முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியா ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து மறு வரையறையால் தமிழ்நாடு மட்டுமன்றி தென்னிந்தியா நாடுகள் பாதிக்க கூடாது என்பதற்காக வலியுறுத்த வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சியினர் வேண்டுகோள்.
மார்ச் 9ஆம் தேதி விடுதலை சிறுத்தை மற்றும் மதுரையில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகள் கட்சி சார்பற்ற பல அமைப்புகள் சேர்ந்து மத நல்லிணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் மாநகர் காவல் ஆணையாளர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இந்துக்களாக இருந்தாலும் பிற மதத்தினராக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற வலியுறுத்தும் சகோதரத்துவ பேரணி தான் காவல் ஆணையாளர் இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அனைத்து தரப்பு சார்ந்தவர்களும் இணக்கமாக இந்த பேரணிக்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல.

இந்திய அரசாங்கம் பல லட்சம் கோடி கடன் வைத்துள்ளது மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் எவ்வளவு இதற்கு கமிஷன் வாங்கியுள்ளார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தட்டும் அதன் பிறகு முதல்வரை கேட்கலாம்.14 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டு வரும் சீமான் வளத்திற்கும் திமுக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை இது தனிப்பட்ட பிரச்சனை சட்டபூர்வமாக எதிர்கொள்கிறார்.
தவெக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்போவதாக கூறுகிறார் விஜய் கட்சி இப்பதான் தொடங்கியுள்ளார் ஒரு வருடம் ஆகிறது பலமுறை அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன் இந்த முறையும் வாழ்த்துக்கள் என்றார்.