மதுரை, திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் பத்தாவது ஆண்டு புதிய நிர்வாகிகள்
பதவியேற்பு விழா நடைபெற்றது. ரோஸ் அரிமா சங்கத் தலைவராக விஜயபாண்டி பொறுப்பேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்.
விருதுகளை வழங்கி சிறப்புரையாற்ற திருமங்கலம் காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்சூர் நாகர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிப் பேசினார். துணைப் பொருளாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் ஒருங்கிணைப்பாளர் விமல் குமார் மண்டல தலைவர் பூசைத்துறை வட்டாரத்தலைவர்
இமானுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகளாக விஜய் பாண்டி தலைவராகவும், முத்துக்குமார் துணைத் தலைவராகவும், பழனிமுத்துக் குமரன்
செயலாளராகவும், குருநாத ஈஸ்வரன் இணைச் செயலாளராகவும், சுந்தரபாண்டி பொருளாளராகவும், அனிதா வி. பால்ராஜ் பட்டைய தலைவராகவும், சுந்தரம் உடனடி முன்னாள் தலைவராகவும், மீனா கே. சிவராஜன் ஒருங்கிணைப்பாளராகவும், வைரமுத்து உறுப்பினர் பெருக்க தலைவராகவும், சுரேஷ்குமார் பசிப்பிணி போக்குதல்
திட்ட இயக்குனராகவும், மணிகண்டன், சேவை திட்டஇயக்குனராகவும், அருண்குமார் ,எல்.ஐ.சி. ஒருங்கிணைப்பாளராகவும், சிவசுப்பிரமணியன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
