கள்ளக்குறிச்சி விசசாராய பலி சம்பவத்திற்கு பின்பே திருமாவளவன் மது ஒழிப்பு குறித்து பேசுகிறார். மது ஒழிப்பில் திருமா, எல்கேஜி மாணவன் நாங்கள் ph.d பட்டம் பெற்றவர்கள் மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ்
மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்பதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது..,
தமிழக முதல்வர் 17 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து 19 நிறுவனங்களில் மூலம் 7600 கோடிமுதலீட்டிற்கான கையெழுத்திட்டு இருக்கிறார். இது ஒரு தோல்வி பயணம், மற்ற மாநில முதல்வர்கள் ஐந்து நாட்கள் ஆறு நாட்களில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அந்நிய முதலீடுகளுக்காக 30000 கோடி 40,000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கிறார்கள் .
மதுவிலக்கு அமைச்சர் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பாதிப்பு வரககூடும் எனக் கூறுகிறார். தமிழகத்தில் அனைத்து விதமான போதைப் பொருள்களும் கிடைக்கிறது. கூலிப் என்ற போதை பொருளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அதை ஏன் அரசு தடை செய்யக்கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
முதலமைச்சரின் என்னதான் செய்து கொண்டிருக்கிறார் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்ககள். காவல்துறை எதற்கு இருக்கிறது. இங்கு காவல் துறைக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. சென்னை கோவளம் பகுதியில் சுற்றுலா ஹெலிகாப்டர் சர்வீஸ் என தொடங்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரும் போது சென்னை தான் மூன்று மடங்கு அதிகமான பறவைகள் வருகிறது. கும்மிடிபூண்டி கோவளம், சதுப்பு நில காடுகள் பகுதியில் வந்து தங்குகின்றன.
சுற்று சூழலுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. அதிக சத்ததினால் மனிதர்கள் பறவைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை தவிர்த்து மூட வேண்டும்.. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் பறவைகளை பாதுகாக்க வேண்டும்.. தமிழக அரசு இதை நிறுத்த வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி சாதி கட்சி என திருமா கூறியது பற்றி?
பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கான 20% சத இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம்.
மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பிஎச்டி படித்துள்ளோம் திருமாவளவன் எல்கேஜி தான் படித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின்பு தான் மதுவிலக்கு பற்றி திருமாவளவன் பேசுகிறார் நாங்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பே ஐயா ராமதாசு மதுவிலக்கு குறித்து பேசி வருகிறார். மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமா பேசிய வீடியோ பதிவு குறித்த கேள்விக்கு?
திருமாவளவன் பதிவு சரியான பதிவு. அதை ஏன் நீக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியது தான் சரியில்லை. இதுக்காக ஸ்டாலின் கோவப்படுவார் என்று வீடியோ பதிவை நீக்கி உள்ளனர்.
ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதில் தவறில்லை. தமிழ்நாட்டில் நிலை மோசமாக உள்ளது. நாடு முழுவதும் மதுவிலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம்..
மதுவிலக்கு எல்லா மாநிலங்களிலும் இதை செய்ய வேண்டும் படிப்படியாக கொண்டு வர வேண்டும்.
பாஜக கூட்டணியில் பாமக உள்ளதால் நாடு முழுவதும் மதுவிலக்கு கொள்கையே ஆதரிக்க கூறுவீர்களா? கண்டிப்பாக கூறுவோம். அரசியலமைப்பு சட்டம் 47 வது பிரிவின் கீழ் நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று உள்ளது அதை வலியுறுத்துவோம்.
தமிழ்நாடு அரசு மதுவை விற்கவில்லை திணிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வருடத்திற்கு இவ்வளவு மது விற்க வேண்டும் என்று அளவுகோல் வைக்கிறார்கள். மதுவை ஒழிப்பேன் என கூறும் திருமாவளவன் மது உற்பத்தி செய்யும் அலைகளை வைத்துள்ள டி ஆர் பாலு ஜெகத்ரட்சகனுக்கு பிரச்சாரம் செய்வது ஏன் திருமாவளவன் மது ஒழிக்கணும் என கூறுகிறார்கள். மது ஆலை வைத்த டி ஆர் பாலுக்கு எதற்கு நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள்.
டி. ஆர்.பாலுவின் மது ஆலையில் இருந்து டாஸ்மார்க் 20% ஜெகத்ரட்சகனின் மது ஆலையில் இருந்து 20 சதவீதம் என மொத்தம் 40 சதவீதம் மதுக்கள் விற்பனை செய்யப்படுகிறது.