• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கடந்த 4 மாதத்தில் 40 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டார்கள் – ஆர். பி. உதயகுமார் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Sep 18, 2026

முதல்வர் விஜய் லண்டன் பயணம் முடித்துவிட்டு தமிழகம் இன்றைக்கு திரும்பி இருக்கிறார்கள்.முதல்வர் லண்டனில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்லது அஜித் அவர்களுடன் சேர்ந்து தன்னை விளம்பரப்படுத்தி, தன் மீது அந்த கவனத்தை விரிவாக்க
செய்வதற்காகவா என்கின்ற ஒரு விமர்சனத்தை முதல்வர் தவிர்க்க முடியாததாக இருக்கிறது இந்த லண்டன் பயணம்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த மதர்சன் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்வதற்காக 11 ஆயிரம் கோடி என்ற அளவில் இன்றைக்கு செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்வதற்காகவா கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து லண்டன் வரை சென்று இருக்கிறார்.

முதல்வர் நினைத்தால் தலைமை செயலகத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு இருக்க முடியுமே? லண்டன் பயணம் என்பது தொழில் முதலீடை ஈர்ப்பை தாண்டி அங்கே வேறு ஏதேனும் அவர் கவனத்தை ஈர்த்துக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அந்த கார் ரேஸ் பங்கேற்பு அந்த விமர்சனங்களை தள்ளி வைக்க முடியாது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிஜி தலைமை நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கிறபோது நம் நாட்டு முதல்வர் மட்டும் லண்டனில் இருக்கிறார்கள். ஆறு நாள் பயணத்தில் முதல்வர் எத்தனை நாள் எத்தனை இடங்களிலே நேரில் சென்று முதலீட்டாளர்களை சந்தித்தார் என்ற கேள்வி வருகிற போது ,நமக்கு கிடைத்திருக்கிற அந்த செய்தி அடிப்படையில் அவர் உள் அரங்கில் உட்கார்ந்து கொண்டு முதலீடுகளை ஈர்த்துக்கிறார் என்று தான் பதில் கிடைக்கும் .நேரடியாக அங்கே தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் இவர்களெல்லாம் அவர் பார்த்ததாக செய்தி குறிப்பில் இல்லை.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் எல்லாம் இங்க இருக்கிறபோது அதில் ஒரு முக்கியமாக அந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முதல்வர் விஜய் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அவருடைய சந்திப்பை தள்ளி வைத்துவிட்டு தவிர்த்து விட்டு தன்னுடைய லண்டன் பயணத்தின் போது முதல்வர் முன்னுரிமை கொடுத்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

ஒருவேளை முதல்வரை தன்னை சந்திப்பதற்கு ஆர்வம் காட்டிய அன்வர் இப்ராஹிம் மலேசிய பிரதமர் சந்தித்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி முதலீடுகள் நமக்கு கிடைக்க தமிழகத்திற்கு வந்திருக்கும் என்ற கருத்தையும் நாம் மறுக்க முடியாது அதை கடந்து போகவும் முடியாது.

தொழில் முதலீடுகள் ஈர்க்க எடப்பாடியார் வெளிநாடு செல்கின்ற போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அழைத்துச் சென்றார். அதே திமுக ஆட்சியில் ஸ்டாலின் வெளிநாடு சென்ற பொழுது தொழில்துறை அமைச்சரையும் அழைத்து சென்றார்.

ஆனால் முதல் முறையாக முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு என்று சொல்லுகிற போது தொழிற்துறை அமைச்சர் , தொழில் துறை செயலாளரும செல்லவில்லை. ஆனால் முதல்வரின் நண்பர்களான ஜெகதீஷ் பழனிச்சாமி, விஷ்ணு ரெட்டி முதல்வர் தனி உதவியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் அவருடன் லண்டன் பயணம் மேற்கொண்டு இருப்பதையும் அந்த சர்ச்சையை தவிர்க்க முடியவில்லை.

இவையெல்லாம் மிஞ்சும் விதமாக இன்றைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளத்தை கவனத்தைப் பெற்று இருக்கிற நடிகர் அஜித் பங்கேற்ற அந்தக் கார் ரேஸ் நிகழ்வில் முதல்வர் விஜய்கலந்து கொண்டதும் அங்கு முதல்வர் விஜய்யின் அன்புக்குரியர் உடன் நடைபெற்ற சம்பவங்களும் உலகம் முழுவதும் கடும் விமர்சனத்திற்கு இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்திலே தவெக ஆட்சிக்கு வந்த இந்த நான்கு மாதத்தில் இதுவரை
40 ஆயிரம் கோடி நான்கு மாதத்தில் கடன் வாங்கியிருக்கிறார். இதை எல்லாம் மிகத் தெளிவாக மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெளிவாக எடப்பாடியார் கூறியுள்ளார்.

இந்த நான்கு மாதங்களில் 40 ஆயிரம் கோடி எதற்கு வாங்கி இருக்கிறார்கள் வருவாய் செலவினத்திற்கு சென்று விட்டதாக தகவல் வருகிறது.

ஆனால் இந்த நான்கு மாதத்தில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள்
வெறும் அலங்கார அறிவிப்புகளாக மட்டுமே உள்ளதை தவிர எதுவும் நமக்கு கிடைத்ததாக தெரியவில்லை.

எம்.மோகள் இன்றைக்கு கையெழுத்து இடப்பட்டாத செய்தி இருக்கிறது அதில் பத்திரிக்கையாளர்களுக்கு சந்திப்பு கிடையாது பொதுவாக வெளிநாடு சென்று வருகிறபோது பத்திரிகையாளர்களை சந்தித்து இவ்வளவு முதலீடு இத்தனை கம்பெனி, வேலைவாய்ப்பு , எப்படி அரசு உதவி செய்கிறது, அரசு இவ்வளவு மானியம் தருகிறது என ஒரு புள்ளி விவரங்களை கொடுப்பதுதான் இதுவரை தமிழகம் பார்த்திருக்கிறது.

முதல்வர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிநாட்டு பயணம் குறித்து இந்த வெளியிட்டதாக தெரியவில்லை உடன் சென்ற அமைச்சர்கள் கூட அதுகுறித்து எந்த விவரங்களையும் மக்களுக்கு சொன்னதாகவும் தெரியவில்லை.
ஒரு அரசு பயணமாக செல்கிறபோது அது குறித்து விளக்கங்களை பத்தியாளர்களை சந்தித்து கூறுவது தேசகுற்றம் அல்ல அந்த விவரங்களை சொல்கிற போதுதான் மக்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் இல்லை என்றால் இந்த விமர்சனங்களை தவிர்க்க முடியாது இந்த கடும் விமர்சனங்களை நீங்கள் தள்ளி வைக்கவும் முடியாது.

ஆகவே வெறும் அலங்கார அறிவிப்புகளை நீங்கள் வெளியிட்டு இதுதான் தவெக அரசின் சாதனை என்று சொன்னால் உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்வதோடு மக்களை ஏமாற்ற நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள் .

அதற்கு இந்த இடைத்தேர்தல் உங்களுக்கு ஒரு நல்ல பாடம் எடுப்பதற்கு இரண்டு தொகுதிகளிலும் எடப்பாடியார் தலைமையிலான இரட்டை இலை வென்று உங்களுக்கு ஒரு நல்ல பாடத்தை இந்த தமிழ்நாட்டு மக்கள் புரிய வைப்பார்கள் என கூறினார்.