• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள் அவர்கள் – சீமான் பேட்டி

ByA.Tamilselvan

Sep 27, 2022

தமிழ்நாட்டை குறிவைத்து அவர்கள் செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பேட்டி
சென்னை எழும்பூரில் சீமான், பேட்டி அளித்தார். அப்போது அவர் … சாதி மத அடையாளத்தால் சிதறிக்கிடந்த மக்களை தமிழர்கள் என்று ஒன்றிணைத்து நாம் தமிழர் இயக்கத்தை சி.பா. ஆதித்தனார் தொடங்கினார். அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். காந்தி பொதுவானவர் என்றால் சவார்க்கர் எதற்கு வருகிறார். இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்கரும் தான். காந்தியை சுட்டதால் தடை செய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தடையை நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்துள்ளார்கள். மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக பிரிவதை யாராலும் தடுக்க முடியாது என்று அம்பேத்கர் சொன்னார். தலைவர்கள் சிலை அடையாளம். அதை சிதைப்பதை எதிர்க்கிறேன். அரசியல் அழுத்தத்தின் பெயரில்தான் ஆர்.எஸ் எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை பற்றி என்ன கவலை இருக்கிறது. தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள் அவர்கள். கோவில்களை தனியாருக்கு கொடுக்க சொல்கிறார்கள். சபரிமலை கோவிலையும், திருப்பதி கோவிலையும் தனியாருக்கு கொடுக்கட்டும் நாமும் நம் கோவிலை கொடுப்போம். சந்தேகத்தின் பேரில் இஸ்லாமியர்களை கைது செய்வது சரியான நடைமுறை அல்ல. அது தவறாக போய்விடும். இதனை எச்சரிக்கையாகவே சொல்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.