• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குளிக்க சென்ற இளைஞர் பலி..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2023

மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள முல்லைப் பெரியார் கால்வாயில் மதுரை ஜீவா நகர் 2வது தெருவை சேர்ந்த விக்கி(வயது 35) என்பவர் கார்பெண்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று விக்கி தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு கள்ளந்திரி கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு குடும்பத்துடன் நீண்ட நேரம் குளித்து விட்டு பின்னர் மனைவி மற்றும் தன் இரண்டு குழந்தைகளை கால்வாயின் கரைக்கு ஏறும்படி அறிவுறுத்திய பின்னர் விக்கி நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நீருக்குள் மூழ்கி மறைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் விக்கியை தேடியும் பலன் அளிக்காததை, தொடர்ந்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று காலை விக்கியின் உடலை கைப்பற்றிய தீயணைப்பு துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.