தென் கொரியா நாட்டில் ஆசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் ஆசிய கண்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன, இதில் பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

சென்னை திரும்பிய ஐந்து வீராங்கனைகளுக்கும் விமான நிலையத்தில் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் பயிற்சியாளர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்,
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வீராங்கனை மிருதுளா கூறுகையில்,
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பயின்று வருகிறேன். 9 வயதிலிருந்தே ஸ்கேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே பயிற்சி பெற்று சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளேன்.
தற்போது தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். இது எனது இரண்டாவது சர்வதேசப் போட்டி. கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு, இத்தாலியில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றேன்.

எனது போட்டி ரோலர் டெர்பி, ஐந்து வீரர்கள் பங்கேற்கும் வேகமான மற்றும் கரடுமுரடான குழு விளையாட்டு. நான் புள்ளி-ஸ்கோரிங் நிலையில் விளையாடுகிறேன், அங்கு எனது பங்கு எதிராளிகளை முந்தி என் அணிக்கு புள்ளிகளைப் பெறுவதாகும். இது உண்மையிலேயே தைரியம், திறமை மற்றும் குழு ஒருங்கிணைப்பு தேவைப்படும் ஒரு உடல் ரீதியான சவாலான விளையாட்டு.
இந்தப் பயணம் முழுவதும் எனக்கு பயிற்சி அளித்து என்னை வழிநடத்திய எனது பயிற்சியாளர் மணீஷ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தாலியில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பிற்காக, எங்கள் பயணம் மற்றும் செலவுகள் அனைத்தையும் அரசு முழுமையாக வழங்கியது. இந்த ஆண்டும், தென் கொரியாவில் நடைபெற்றம் ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பிற்கு அரசு உதவி செய்தது,
கடந்த ஆண்டுதமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஸ்கேட்டர் நான்தான். இந்த ஆண்டு, தமிழ்நாட்டிலிருந்து ஐந்து ஸ்கேட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் பெருமையாக நினைக்கிறேன்.
மேலும் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாடு அரசு அளிக்கும் நிதியை விரைவாக வழங்கினால் நாங்கள் அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும் இவ்வாறு கூறினார்.