மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 54) வேன் டிரைவர். இவர் நேற்று இரவு 7 மணிக்கு திண்டுக்கலில் இருந்துமதுரை நோக்கி வேனை ஒட்டி சென்று கொண்டிருந்தார்.

அந்த வேன் வாடிப்பட்டி அருகே வடுகபட்டி பிள்ளையார் கோயில் எதிரில் வந்தபோது திடீரென்று எதிர்பாராத வகையில் தன் கட்டுப்பாட்டை இழந்து திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேவை சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த டிரைவர் கதிரேசன் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.











; ?>)
; ?>)
; ?>)