• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது: சசிகலா பேட்டி

சேலத்தில் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய சசிகலாவிடம் அதிமுக இடத்தை பிடிக்க பாஜக முயல்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சசிகலா, ‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது என்று கூறினார். அ.தி.மு.க.வை யார் வழிநடத்த வேண்டும் என்பதை தொண்டர்கள் முடிவுசெய்வார்கள். தொண்டர்கள் அளித்து வரும் பேராதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். புரட்சித் தலைவர் எம் ஜி ஆர், ஜெயலலிதா வழியில் மட்டும்தான் நான் செல்வேன்.

எனக்கென தனி வழி எல்லாம் கிடையாது. என்னுடைய பணி மக்களுக்கானதுதான். நிச்சயமாக நான் அதை செய்வேன் என குறிப்பிட்டார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சசிகலா சேலம், நாமக்கல் என பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் சென்றார். அங்கு உள்ள கோயிகலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்பு அங்குள்ள அதிமுக தொண்டர்களை சந்தித்து அவர் பேசினார். இந்நிலையில் அவர் பயனத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.