• Mon. Jun 24th, 2024

கோவையில் முதலமைச்சர் பங்கேற்கும் முப்பெரும் விழா -பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரம்…..

BySeenu

Jun 15, 2024

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றியை பெற்றது.

இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகு திகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6மணிக்கு இந்த முப்பெரும் விழாவானது நடக்கிறது.இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்கின்றனர்.

விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.15 மணிக்கு விமான மூலம் கோவைக்கு வருகை தருகிறார்.தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின் மாலையில் முப்பெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.

மேலும் இந்த மிக விற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேடை அமைக்கும் இறுதி கட்ட பணியினை அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மாலையில் நடைபெற உள்ள இந்த விழாவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.இதற்காக பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *