• Sun. May 12th, 2024

லாரி மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து எரிவாயு கசிவு…

BySeenu

Dec 9, 2023

கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு வந்த லாரி நள்ளிவில் கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடிரென அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து எரிவாயு லோடுடன் இருந்த லாரிகள் மீது விழுந்தது. இதில் எரிவாயு வால்வுகள் உடைந்து லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் லாரியில் ஏற்பட்ட கழிவு நிறுத்த எரிவாயு ஊழியர்கள் விரைந்தனர். மேலும் அங்கு தீயணைப்பு துறையினரும் குவிக்கப்பட்டனர். லாரிகளை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு வரை போலீசார் தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்தாம் இருக்க அறிவுறுத்தி கண்காணித்து வந்தனர். மேலும் பாலக்காடு சாலையில் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றி விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு வால்வுகள் அடைக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வால்வை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *