நிசான் மோட்டார் இந்தியா, தனது புதிய 7 சீட்டர் காரான நிசான் கிராவைட் எனும் புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய நிஸான் கிராவைட் கார் அறிமுக விழா கோவை சங்கனூர் சாலையில் உள்ள இ.வி.எம்.நிஸான் கோயம்புத்தூர் (E V M NISSAN COIMBATORE) ஷோரூமில் நடைபெற்றது..
நிகழ்ச்சியில், நிஸான் இந்தியா விற்பனை பிரிவு பொது மேலாளர் சவுரப் பாசின்,ஏரியா மேனேஜர் பிரபு பக்தவத்சலம் மற்றும் இ.வி.எம்.நிஸான் பொது மேலாளர் சபரி நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிஸான் கிராவைட் காரை அறிமுகம் செய்தனர்..
இந்நிகழ்ச்சியில். நிஸான் மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
சிறந்த மைலேஜ் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள கிராவைட் காரை முதல் ஐயாயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்ப விலையாக ரூபாய் .5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது…
வடிவமைப்பில் கிராவைட், நிசான் நிறுவனத்தின் அடையாளமாக இருக்கும் V-motion கிரில் வடிவத்தை கொண்டுள்ளது. முன்புறத்தில் மெல்லிய LED ஹெட்லைட்கள் மற்றும் டே டைம் ரன்னிங் லைட்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் புதிய 15 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் மற்றும் பின் பக்கத்தில் கூர்மையான டெயில் லைட்கள், நடுவில் நிசான் லோகோ மற்றும் குரோம் ஸ்ட்ரிப் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐந்து வண்ணங்களில் சந்தைக்கு வந்துள்ள புதிய நிஸான் கிராவைட் பட்ஜெட் கார் பிரியர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் அதே சமயம் 7 சீட்டர்,நவீன வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடதக்கது.



