விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் நகரில் லோகநாதன் என்பவர் வீட்டின் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சமையலறையில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.