திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நாளை மறுநாள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குடம் எடுத்து விழாவிற்காக தயாராகும் பணிகளை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் காவல்துறை ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

இந்த வகையில் குடமுழுக்கு நடைபெறும் ராஜகோபுரத்திற்கு அருகே கோவிலுக்கு மேல் தளத்தில் 1800 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்த நிலையில் மேல் தளத்திற்கு செல்வதற்கு தற்காலிக படிக்கட்டுகள் மற்றும் தடுப்பு வேலிகள், ஒரு மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவிலுக்கு பின்புறம் இருக்கக்கூடிய மலை மீது லேசர் லைட் (மின்னொளி) மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால் கோபுரம் மற்றும் மலை முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் ஜொலிப்பது பார்ப்பவர் கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது.