முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடியில் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகி 9 முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் செங்கோட்டையன் தொண்டர்களின் கருத்தாகவும் அவருடன் கருத்தாகவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கருத்தை தெரிவித்ததற்கு,

இதில் அவர் கருத்து தெரிவித்த ஒரே காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எந்த வகையிலும் நியாயம் இல்லை என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நாங்களும் அதைத்தான் நினைக்கிறேன் அதை கருத்தை தான் செங்கோட்டையனும் தெரிவித்தார்.
மேலும் உலகத்திலே அதிமுகவில் யாரும் ஒன்றிணைக்க கூடாது என நினைப்பது தான் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். அதிமுக 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் ஆண்ட கட்சியாக இருந்து வந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை கண்டு வருகிறது.

அம்மா அவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை தற்போது அழிவு பாதைக்கு சென்று வருவதாலும் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் அம்மா ஆட்சியில் உருவாக்குவதில் ஏன் அனைவரும் ஒன்றிணைய கூடாது என இதில் யாருக்கு என்ன நஷ்டம் என தெரிவித்தார்.
இதற்கு கட்சித் தொண்டர்களும் மக்களும் உரிய பாடம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.






; ?>)
; ?>)
; ?>)
