தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டாடும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தமற்றிலும் மதம் இனம் மொழி கடந்து அந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்று பார்த்தால் வயது பாலினம் எல்லாம் கடந்து ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வாடி வாசல்களில் நடைபெற்று வரும் காளைகளுக்கும் காளையர்களுக்குமான இந்த போட்டியை அனைவரும் ரசித்து வருகிறார்கள் என்பதை தாண்டி இந்த நிகழ்ச்சியானது தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் நிகழ்வாக அமைந்திருக்கிறது. காலம் காலமாக இந்த நிகழ்ச்சியை மஞ்சுவிரட்டு என்றும் ஜல்லிக்கட்டு என்றும் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வானது ஒரு காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட நிலையில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட தன்னெழுச்சியின் காரணமாக இன்று தமிழ்நாட்டில் தங்கு தடை இன்றி நடைபெற்று வருகிறது.
மாடு காளைகள் ஓடுகின்றன காளையர்கள் அடக்க முயற்சிக்கிறார்கள் என்பதை தாண்டி அந்த நிகழ்ச்சியை ரசிகர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் எழுச்சியையும் உத்வேகத்தையும் ஆர்வத்தையும் நிகழ்ச்சியின் போக்கையும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது வர்ணனையாளர்களின் பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்கிறது. அந்த வர்ணனையாளர்களில் தமிழ்நாடு மட்டுமல்லாது உலக நாடுகளில் எல்லாம் பெயர் பெற்று விளங்கியதால் சிறந்த வர்ணனையாளர் என்ற விருது பெற்றவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள இராப்பூசல் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் ஆவார். காளைகள் மற்றும் காளையர்களின் வீரத்தை பார்த்து ரசிப்பது ஒரு புறம் இருக்க அவரது வர்ணனையை கேட்டு காலை முதல் மாலை வரை அவரது குரலில் கட்டுண்டு கிடக்கும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர் தனது வாழ்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்சிகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளில் வர்ணனையாளராக பணியாற்றி உலகம் முழுவதும் பிரபலமானவராக விளங்கி வருகிறார்.
ஆனாலும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அந்த நிகழ்ச்சிகளை சரியாக கொண்டு செல்வதற்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்கு தங்களது ஆலோசனையும் தேவை என்பதை தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் விதமாக இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அந்த மனுவில் அவர் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ரசிப்பதிலும் நடத்துவதிலும் பல்வேறு குளறுபடிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டு இருந்த போதிலும் அந்த குளறுபடிகளை நீக்குவதற்கு வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும் போது வர்ணனையாளர்களிடமும் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். அதற்கான காரணம் என்னவென்றால் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் பல்வேறு சலசலப்புகள் சில விபத்துக்கள் விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தங்களையும் அழைத்து ஆலோசனை கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
அவ்வாறு ஆலோசனை கேட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் போது யாருக்கும் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது என்பதோடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் நடைபெறும் காயங்கள் உள்பட எந்தவிதமான இழப்புகளும் ஏற்படாமல் இருப்பதற்கு தங்களது ஆலோசனையும் இந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படும். பல விபத்துகள் தவிர்க்கப்படும். பல உயிரிழப்புகள் ஏற்படாமல் காப்பாற்றப்படும் என்பதையெல்லாம் வலியுறுத்தி இருக்கிறார்.

அதேபோல் வருணையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் இவருக்கு மட்டுமல்லாது இவரை போன்ற சிறந்த வர்ணனையாளர்களுக்கு கலைமாமணி விருது வழங்க வேண்டும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரும் தொகையை வைத்து அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது என்றாலும் அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் தரும் தமிழக அரசால் மாவட்டம் தோறும் இருக்கும் ஜல்லிக்கட்டு வர்ணணையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்பதையும் கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார். இப்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் உள்ள ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வடமாடு நிகழ்ச்சி மற்றும் மாட்டு வண்டி பந்தய நிகழ்ச்சிகளை வர்ணனை செய்யும் வர்ணனையாளர்களையும் ஒன்றிணைத்து சங்கம் ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




