அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப் பின் முப்பெரும் விழா, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கோவை முழுமை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டு,சிறந்த ரியல் எஸ்டேட் தொழில் முனைவோருக்கு விருது வழங்குதல், ஃபெயிரா புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா மற்றும் கோரிக்கை மாநாடாக நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்,தலைமை விருந்தினராக ஃபெயிரா நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி கலந்து கொண்டார்.
கவுரவ அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பிரியகுமார் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் ,ஃபெயிரா பொதுச் செயலாளர் நேருநகர் நந்து ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த மக்கள் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து கோரிக்கை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில்,கோவை நகரின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத்திட்டம் 2041திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,அதே நேரத்தில் இந்த திட்டத்தில் செயல்படுத்த இறுதி செய்யப்பட்டுள்ள நில வகைபாடுகள் குறித்து மீண்டும் ஒரு முறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு இறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது.
5000 சதுர அடிக்கு மேல் உள்ள தனிமனைகளுக்கு மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும், மலைகள் பாதுகாப்பு அதிகார குடும்பத்தின் எல்லைகளை வரையறை செய்து ரியல் எஸ்டேட் அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையின்மை சான்று வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்,
கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட நகர நில அளவை பதிவேடுகளை உட்பிரிவு செய்து பட்டா வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைந்து விரைவில் கணினி பட்டாவை தானியங்கி முறையில் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில், ஃபெயிரா தேசிய துணைச் செயலாளர் கண்ணன் மாநில துணை தலைவர்கள் முரளிதரன், ராமநாதன், மாநில இணை செயலாளர் பாலசுப்பிரமணி
கோவை மாவட்ட தலைவர்கள் சுரேஷ் சுரேஷ்குமார் வில்சன், கோவை மண்டல தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,உட்பட மாநில தேசிய மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.