மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும், விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ரயில்வே மேம்பால விரிசல்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்தனர். பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டினை தெரிவித்துக் கொண்டனர்.
