• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சி

BySeenu

Nov 20, 2024

ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியை போலீஸ் துணை கமிஷனர் துவக்கி வைத்தார்.

மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4 நாட்கள் நடைபெற உள்ள நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாடு 2024-ஐயொட்டி கோவை பந்தைய சாலை பகுதியில் சுவாச ஆரோக்கியம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.இதனை கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த வாக்கத்தானில் மருத்துவர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு சமீப காலமாக நாள்பட்ட மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அவற்றை தடுப்பது குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்தும் வாக்கத்தான் மூலம் வலியுறுத்தினர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒவ்வொருவரும் மாறுவதற்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு சுவாச நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.இந்த வாக்கத்தான் உடற்பயிற்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் தூய்மையான காற்று மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான நடவடிக்கைக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது என வாக்கத்தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.