திண்டுக்கல் அருகே கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த வேடசந்தூர் போலீசார் – குழந்தைகள் நான்கு பேர் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த வைஷ்ணவி, தாய் மாமனை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா(24) இவருக்கும் திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் ஊரில் நடைபெற்ற விழாவில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வீட்டை விட்டு திருப்பூர் சென்று தனியாக குடும்பம் நடத்தினர். புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் இருவரையும் வேடசந்துார் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி நடத்திய விசாரணையில் இளம்பெண் தனது கள்ளக்காதலருடன் தான் செல்வேன் என கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.
திருமணமான இவர்களுக்கு தலா இரு குழந்தைகள் உள்ள நிலையில் சேர்ந்துதான் வாழ்வோம் என்றால் போலீசார் அவர்களுக்கு முறையான அறிவுரை கூறி கண்டிக்க வேண்டும். அல்லது பிரித்து அனுப்பி இருக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை சேர்ந்து வாழுங்கள் என அனுப்பி வைத்ததால் இவர்களது நான்கு குழந்தைகள் பரிதாபத்திற்கு ஆளாகி உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போலீசாருக்கு குடும்பம் சார்ந்த பிரச்னைகளில் முடிவெடுப்பது குறித்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.








