விருதுநகர் மாவட்டம் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனை அருகே உள்ள சுப்பையா நாடார் அரசு மேல் நிலை பள்ளி கடந்த ஐம்பது ஆண்டுகளாகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

விருதுநகரில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் என இருபாலரும் இணைந்து படிக்கும் ஒரே பள்ளி இது தான்.தற்போது இந்த பள்ளி கால்நடைகள் மேய்ச்சல் நிலமாகவும் ,ஓய்வரையாகவும் உள்ளது. இப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்து இடிந்து விழும் நிலையில் உள்ளது, இதை பள்ளி நிர்வாகமே பதாகைகளாக எழுதி கட்டி தொங்க விட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட தலைநகரில் உள்ள இந்த பள்ளியை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இரண்டு அமைச்சர்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த பள்ளி இனி வரும் காலங்களில் நல்ல முறையில் இயங்கி மாணவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.




