கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் சரக்கு லோடு ஏற்றி வந்த டெம்போ மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இதில் பேருந்து கண்ணாடி உடைந்து கம்பிகள் பேருந்துகக்ள் சென்ற நிலையில் நல்வாய்பபக பயணிகள் உயிர்தப்பினர்.

கோவையில் ஆயிரக் கணக்கான தனியார் மற்றும் அரசு நகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது. நாள்தோறும் கோவை மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழில் போட்டியின் காரணமாகவும் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக போட்டி, போட்டுக் கொண்டு மற்ற பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளை முந்திச் செல்வதும், தனியார் பேருந்துகளுக்கு இடையே அவ்வப்போது ஏற்படுவதால், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் இதில் பயணம் செய்யும் பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், உயிரை பணயம் வைத்துக் கொண்டு அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையினர் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், மீண்டும் வருவாய் ஈட்ட வேண்டும், என்பதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்துவதன் காரணமாக போட்டி, போட்டுக் கொண்டு அசுர வேகத்தில் பேருந்துகளை இயக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் , சிறிய கனரக வாகனத்தில் விதிமுறைக்கு புறம்பாக இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த நிலையில், பின்னாள் அதி வேகத்தில் வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் டெம்போவில் ஏற்றி வந்த இரும்புக் கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக கவுண்டம்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருவதுக்கு குறிப்பிடத்தக்கது..




