• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தோட்டத்தில் இறந்து கிடந்த மூதாட்டி..,

ByK Kaliraj

Oct 4, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது.இ இராமநாதபுரம் கிராமம். இக்கிரமத்தைச் சேர்ந்த சங்கரப்பநாயக்கர் (வயது 60) என்பவர் தோட்டத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலைக்கு தகவல் தெரிவித்தனர் .

அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் கடும் வெயில் காரணமாக இறந்தாரா அல்லது உணவின்றி இறந்தாரா என்பது தெரியாததால ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்