• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அரைகம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ByKalamegam Viswanathan

Apr 24, 2025

போப் ஆண்டவர் மறைவையொட்டி, மதுரை விமான நிலையத்தில் மூன்று நாள் அரைகம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசிய கொடி மீண்டும் மேலே ஏற்றப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தையான போப் பிரான்சிஸ்(88) அந்த 21ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் மறைவையொட்டி மத்திய அரசு 3நாள் துக்க தினமாக அறிவித்து நாடு முழுவதும் தேசிய கொடியினை அரைகம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் உள்ள 100 அடி கம்பத்தில் இருந்து கடந்த 21ம் தேதி மாலை தேசிய கொடி இறக்கப்பட்டு அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் போப்பாண்டவர் மறைவையொட்டி துக்கத்தை அனுசரிக்கும் விதமாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தது.

அந்த வகையில் மதுரை விமான நிலையத்திலும் போப்பாண்டவர் மறைவிற்கு மூன்று நாள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதனை ஒட்டி தற்போது மீண்டும் தேசியக்கொடி முழுவதுமாக ஏற்றப்பட்டுள்ளது.