மறைந்த முன்னாள் தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனார் எம்பி சிலைகளை அரியலூர் மாவட்டம், கீழவண்ணம், சிலுப்பனூர், மேல இராமநல்லூர் ஆகிய கிராமங் களிலும், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் காமராஜர் சிலையையும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் எம்பி நேற்று திறந்து வைத்து, பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

திமுகவின் செயல்பாட்டை மக்கள் கூர்மையாக கவனித்துக் கொண்டு ள்ளனர். தமாகா ஆளும் கட்சியும் இல்லை; அராஜகக் கட்சியும் இல்லை.எங்கள் மீது ஊழல், எங்கள் கட்சி நிர்வாகிகள் சிறை சென்றது போன்ற அனுபவம் எதுவும் இல்லை. நாங்கள் மூப்பனார் வழியில் செல்வதால் சட்டத்தை மீற மாட்டோம். தமிழகம் சட்டம்-ஒழுங்கில் சீர்கெட்டுக் கிடக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறது. தற்போது, மக்களை ஏமாற்ற மீண்டும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட் டுள்ளது. தற்போது திமுக அரசைக் கண்டித்து பல்வேறு அரசு துறையினர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாறஆட்சிமாற்றம் அவசியம்.

திமுகவை வீழ்த்தும் சக்தியாகஎங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது என்றார்.
தொடர்ந்து, வைப்பூர் – முத்து வாஞ்சேரி மருதையாற்றில் உயர் மட்ட மேம்பாலம், மேலராமநல்லூர் தெற்கு பகுதியில் கொள்ளிடத்தில் மேம்பாலம், திருமானூர் – விளாங் குடி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம்,ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் சுற்றுலா பயணிகள் அரசு சார்பில் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமாகா சார்பில் முன்வைக்கிறேன்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் சுரேஷ் மூப்பனார், முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், டெல்டா மண்டல வர்த்தக அணி தலைவர் பனங்கூர் சி.காமராஜ், தமாகா நிர்வாகிகள் எஸ் .ஆர் .எம்.குமார், வழக்கறிஞர் கள் ஏ.எம் பழனிச்சாமி, ஏ.வி செல்வராஜ்,விவசாய அணி கே.ஆர் வேதநாயகம்,மனோஜ் கைலாசம் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும்மாவட்டத் தலைவர் பனங்கூர் .எஸ் .ஜெயராமன் வரவேற்றார்.மாவட்ட தமாகா துணை தலைவர் வி.ஜி.எம் விஜயகுமார் நன்றி கூறினார்.




