திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் செல்லும் விமானங்களும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் மனமும் அதிகரித்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் பயணிகள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளார்.
அதனை இன்று விமான பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்று அவரது இணையர் ஜனனி மகேஷ் அர்ப்பணித்து வைத்தார் இந்நிகழ்வில் ஏர்போர்ட் இயக்குனர் ஞானேஸ்வரா ராவ், மேலாளர் சுனிதா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
