போடியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு பள்ளியில் பழைய கூடை பந்தாட்ட மைதானம் சிதலமடைந்த நிலையில் புதிய கூடை பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடைபந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தப் பள்ளியிலே பயின்று உடல் நல குறைவால் மறைந்த தனது பேத்தி கௌசல்யா நினைவாக மீனாட்சிபுரம் பேரூராட்சி தலைவர் திருப்பதி நன்கொடையில் புதிய மைதானம் அமைய உள்ளது. விளையாட்டு மைதானம் மட்டுமில்லாமல் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட கேலரியுடன் இந்தக் கூடைப் பந்தாட்ட மைதானம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் நீண்ட நாட்களாக சிதலமடைந்த விளையாட்டு மைதானத்தில் கூடைபந்தாட்ட வீரர்கள் விளையாடி வந்த நிலையில் தற்போது புதிய விளையாட்டு மைதானம் அமைய உள்ளதால் வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறைந்த பேத்தியின் நினைவாக கூடைப்பந்தாட்ட மைதானம் அமைத்துக் கொடுக்கும் பேரூராட்சி தலைவருக்கு பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் வீரர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.