கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் மூன்று நாள் படப்பிடிப்பிற்காக தவெக தலைவர் விஜய் கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரையில் விமான நிலையம் வந்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் தன் வேலைக்கு செல்வதாக தன்னை பின்தொடர வேண்டாம் என விஜய் கூறியும் மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயின் வாகனங்களுக்கு முன்பாகவும் பின்னாலும் சென்று விஜய்க்கு மலர் தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து மூன்று நாள் கொடைக்கானலில் படபிடிப்பை முடித்துவிட்டு தனி விமானத்தில் மீண்டும் சென்னை செல்வதற்காக இன்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.
தவெக தொண்டர்கள் ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தலின் பெயரில் விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை வந்த சிலரும் விமான நிலையத்திற்குள் காவலர்கள் அனுமதி மறுத்ததால் திரும்பி சென்றனர்.
இதனால் மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் வரும்போது திடீரென விஜய் பார்க்க வந்த தொண்டர் ஒருவர் பாதுகாவலர்களின் மீது முன்னே வந்ததால் திடீரென விஜயுடன் வந்த பாதுகாவலர் ஒருவர் திடீரென துப்பாக்கி எடுத்து அவரை நோக்கி நீட்டினார். தொண்டர் என தெரிய வந்தவுடன் அவரை உடன் இருந்த பாதுகாவலர்களாக அழைத்துச் சென்றார்.
விஜயை தாக்க வந்ததாக நினைத்து பாதுகாவலர் துப்பாக்கி எடுத்த சம்பவத்தில் காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.