தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் காவாலிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நேற்று மதியம் காவாலிப்பட்டி, மேல மேட்டுப்பட்டி கிராம பெண்கள் காவாலிப்பட்டி கிராமத்தில் உள்ள குமலான் குளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், அங்கு பணியாற்றிய பெண்களை ஒருமையில் பேசி 100 நாள் அட்டைகளை பறிமுதல் செய்து சென்றதாக பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையில் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு இன்று மதியம் திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த திருவோணம் போலீசார் போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பறிமுதல் செய்த 100 நாள் அட்டையை பெற்று தர வேண்டுமென தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 நாள் பணியில் ஈடுபட்ட பெண்களிடம் திருவோணம் பிடிஓ ஒருமையில் பேசிய சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,











; ?>)
; ?>)
; ?>)