மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் இடத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த சிலை அதிமுகவினர் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு அப்பொழுதுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சிலையை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தி சென்றுள்ளனர்.எம்ஜிஆர் சிலை கீழே தள்ளி விடப்பட்டு சேதப்படுத்தியது இன்று காலை பார்த்த பகுதி மக்கள் அதிமுக நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் மன்ற நிர்வாகி வக்கீல் ரமேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்..
சம்பவத்தால் அவனியாபுரம் போவதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து எம்ஜிஆர் சிலை சேதப்படுத்திய தொடர்பாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரினை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்தகாவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் ஆய்வாளர்லிங்கா பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிலையை சேதப்படுத்திய நறுமணவர்களை தேடி வருகின்றனர்.அவனியாபுரம் வாடிவாசல் அருகே இருந்த எம்ஜிஆர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்திய சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது