மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பர்மா காலனியில் வீட்டில் செருப்புகள் அடுக்கி வைக்கும் ஸ்டாண்டில் இருந்த ஷுக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பர்மா காலனி சேர்ந்தவர் அருண் இவரது வீட்டின் முன்புறம் காலணிகளை வைப்பதற்கு என காலனி மேடை வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை வழக்கம் போல் வெளியே செல்வதற்காக காலணிகளை அணிவதற்காக அருண் சென்றபோது அதில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலணிகளில் ஒன்றிலிருந்து பாம்பின் சத்தம் கேட்டுள்ளது. உடனே அச்சமடைந்த அருண் திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த பாபு பார்த்தபோது தவளை ஒன்றை முழுங்கிவிட்டு ஷுக்குள் அலையாத விருந்தாளியாக தங்கி இருந்தது தெரிய வந்தது உடனே பாம்பு பிடி வீரர் 3 அடி நீள நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





