• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மாநாட்டின் முதல் நிகழ்வாக நீண்ட மகளிர் ஊர்வலம்..,

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் 17 ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது.மாநாட்டின் முதல் கட்டமாக படந்தாலுமூடு பகுதியில் இருந்து மாநாடு திடலான குழித்துறை பகுதி வரை மாதர் சங்கத்தினரின் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து மாதர் சங்க மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில் , திருவள்ளுவர், மகாகவி சுப்பிரமணிய பாரதி, நாராயண குரு, ராமலிங்க அடிகளார், பெரியார் போன்றவர்களை தற்போதைய சூழ்நிலையில் ஞாபகம் வருகிறது .அவர்களுடைய முயற்சி மறக்க முடியாதது பெண்கள் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர்கள்.

HB1 விசா முன்பு நாலு லட்சம் ரூபாய் என்று இருந்தது – தற்போது அதற்கு 22 மடங்காக அமெரிக்கா அரசு விதித்துள்ளது.நமது நாட்டு மத்திய அரசு அமெரிக்காவின் கைக்கூலியாக இருப்பதால் – தற்போது விதித்துள்ள கூடுதல் கட்டண விவகாரத்திற்கு மௌனம் காத்து வருகிறது.

ஜிஎஸ்டி குறைப்பு என்ற நாடகத்தால் தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட மற்ற மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரிப்பணத்தை முழுவதுமாக வெட்டி குறைத்து மத்திய அரசு நாடகம் ஆடி வருகிறது. இந்திய பொருள்களுக்கு 50% வரி உயர்த்தப்பட்டுள்ளது . இதில் நமது நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது ஆனால் இதற்கு எதிராக மத்திய அரசு எதுவும் பேசவில்லை.

ஜிஎஸ்டியை குறைவு செய்வதற்கு அல்லது கூட்டுவதற்கு கவுன்சில் உள்ளது. ஆனால் கவுன்சில் கூட்டாமலே பிரதமர் அறிக்கை வெளியிட்டுள்ளார் தற்போதைய வரி குறைவால் பொதுமக்களுக்கு எந்த லாபமும் கிடையாது. வரி குறைப்பால் ஒரு மூட்டை சிமெண்ட் ரூபாய் 30 குறைய வேண்டும் ஆனால் சிமெண்ட் கம்பெனிகள் ரூபாய் 35 விலை ஏற்றி உள்ளனர்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கேரள மாநிலத்திற்கு ரூபாய் 8000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி வருவாய் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பிரணராய்விஜயன்
மத்திய அரசின் போலி விலை குறைவு என்ற போலி முகமூடியை அவரது பேச்சில் அம்பலப் படுத்தினார்.