• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரம்மாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் “சரண்டர்”

Byஜெ.துரை

Mar 14, 2025

UPBEAT பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் “சரண்டர்”

கிரைம்-ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விக்டர் குமார் தயாரிப்பில் உருவாகும் சரண்டர், அருமையான திரையரங்க அனுபவம் கொடுக்கும் என பட குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.திரைக்கதை, இயக்கம் கௌதமன் கணபதி . தற்போது சரண்டர் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்தின் கதாநாயகனாக தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தீவிரமான நடிப்பு, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது என இயக்குநர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.அது மட்டுமல்ல, லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான்,பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக, பிரபல இசையமைப்பாளர் விகாஸ் பதீசா தமிழில் முதல் முறையாக இசையமைக்கிறார்.பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பலருடன் பணியாற்றிய இவர், தனித்துவமான இசை அமைப்புகளுக்காக பாராட்டப்பட்டவர். படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில்”சரண்டர்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.