மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூரில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ சப்பானி என்ற மந்தை கருப்பணசாமி கோவில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மந்தை கருப்பணசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது நேற்று காலை 9 மணி அளவில் விநாயகர் கோவில் சுந்தரவல்லி கோவில் காணியாளன் கோவில் சோனை கோவில் ஆகிய கோவில்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் அரிஹர புத்திர அய்யனார் கோவிலில் இருந்து குதிரை எடுத்து கிராமத்தின் முக்கிய வீடுகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது திருவிழா ஏற்பாடுகளை திருவாலவாயநல்லூர் விழா கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.