• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை எலியார்பத்தி காரி உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Apr 13, 2023

ஜல்லிக்கட்டு போட்டியில் புகழ்பெற்ற எலியார்பத்தி காரி காளை உயிரிழப்பு; பொதுமக்கள், இளைஞர்கள் கண்ணீருடன் அஞ்சலி..
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள எலியார்பத்தி பகுதியைச் சேர்ந்த வீர ராம் என்பவரின் சொந்தமான எலியார்பத்தி காரி காளை தமிழகம் முழுவதும் நடைபெற்ற 200க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது.


எலியார்பத்தி பகுதியில் பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் செல்ல பிள்ளையாக திகழ்ந்த காரி காளைக்கு வயது 26 என்றும், இந்த வயது வரைக்கும் எந்தக் காலையும் உயிருடன் இருந்ததில்லை என்பதே இந்த காலையில் சிறப்பு என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் எலியார்பத்தி காரி காளை நேற்று வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. இதனை அப்பகுதி மக்கள்,இளைஞர்கள் என ஏராளமானூர் காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று உரிமையாளரின் சொந்தமான இடத்தில் கண்ணீருடன் காளையை நல்லடக்கம் செய்தனர்.