• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

ByA.Tamilselvan

Mar 29, 2023

கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது .224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது முதல் முறை வாக்காளர்கள் 9.17 லட்சம் அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் 01 ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.