இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், நாசர் என பலர் நடித்த இந்த படத்தை அனுபவ் சின்ஹா என்பவர் இயக்கியிருந்தார்.
2019 வெளியான இப்படத்தின் தமிழ் பதிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஆயுஷ்மான் குரானா நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக தான்யா நடித்துள்ள இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, போனிகபூர் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இந்த தகவலை இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் ஆரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.













; ?>)
; ?>)
; ?>)