• Wed. May 8th, 2024

திமுக அரசு ரூ.4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

4 மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முடியாத அரசு  38 மாவட்டங்களில் தொடர் மழை பெய்தால் எப்படி காப்பாற்றும்? பல மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்களில் இருந்து அனுப்பும் நிவாரண பொருட்களை வாங்கி  விநியோகிப்பதற்கு  கூட கட்டமைப்புகளை ஏற்படுத்தவில்லை எனவும், ரூபாய் 4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். 
இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,  கடந்த  3, 4 நாட்களில் பெய்த மழையால் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. சாலைகள், வீடுகள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதும் இதன் காரணமாக பல லட்சம் பேரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது இன்றைக்கு நமக்கு வேதனை ஏற்படுகிறது.அரசு வெள்ள மீட்பு பணியில் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடாமல் செயல்பாடத அரசாக உள்ளது.
மழைநீர் தேங்கிய 450 க்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், மூன்று லட்சம் வீடுகள் சூழ்ந்து இருக்கிறது. 5 நாட்களுக்கு மேலே ஆகியும் தண்ணீரை வெளியே எடுத்துக் முடியவில்லை. மழைநீரோடு கழிவுநீர் மற்றும் கச்சா எண்ணெய் கலந்து இருக்கிறது இதனால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாய நிலை உள்ளது.

வெள்ளநீர் வடியாததாலும், மின்சாரம் வேண்டுமென்றும் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள் என உணவுக்கு கையேந்தும் நிலைமை உள்ளது. குழந்தைக்கு பால் கேட்டு மக்கள் கண்ணீருடன் போராடி வருகிறார்கள். அந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு அமைச்சர்கள் தயாராக இல்லை. அதிகாரிகளை நியமித்திருக்கிறோம், அமைச்சர்களை நியமித்து இருக்கிறோம் என்று அறிவிப்புகள் வந்து கொண்டே இருங்கிறது ஆனால் செயல்பாடு இல்லை.
கழிவுநீர் மழை நீர் தேங்கி இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல், வேறு வழியின்றி சிலர் பிளாஸ்டிக் பைகளிலும், பேப்பர்களிலும் அந்த மனித கழிவுகளை வெள்ள நீரில் வீசுகிற ஒரு கொடுமையும் உள்ளது.
ஒருவேளை உணவு கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை, ஐந்து நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். மழைநீர் வெளியேற்ற நாதி இல்லையா? என்று மக்கள் கொடுக்கின்ற அந்த வேதனை குரல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கிறதா?
மழை நீரை வெளியேற்ற ராட்சத பம்புகள் வரும் என்று கூறுகிறார்கள் ஆனால் அதற்கு டீசல் போட கூட தயாராக இல்லாத ஒரு நிலையே உள்ளது. இன்றைக்கு எடப்பாடியார் வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதே போல் அதிமுக ஆட்சிக்காலத்தில் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டபோது வெள்ள மீட்பு பணியில் ஈடுபோட்டோம். ஆனால் இன்றைக்கு நான்கு மாவட்டத்திற்கு தடுமாற்றத்தால் அரசு திகைத்து நிற்கிறது.
ஆங்காங்கே இருந்து அனுப்புகிற வெள்ள நிவாரண பொருட்களை கூட மக்களுக்கு வினியோகம் செய்ய நிர்வாகம் தயாராக இல்லை. பல மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்களில் இருந்து அனுப்பும் பால், ரொட்டி, ஆடைகளை, அதை வாங்கி விநியோகிப்பதற்கு அங்கு கட்டமைப்புகளை ஏற்படுத்தவில்லை. ஒரு புயல் வருகிற போது தண்ணீர் தேங்காது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். புயல் என்றால் கனமழை, காற்று ஆகியவை வீசும் அப்போது மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
ஒரு அமைச்சர் நடக்காமல் ஜேசிபியில் செல்கிறார். இது இப்படிப்பட்ட காட்சியை எங்கேயுமே பார்க்க முடியாது.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 2,816 வடிகால்களை சிறப்பாக திறம்பட மேற்கொள்ளப்பட்டது அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது தொடர்ந்து தற்போது திமுக ஆட்சியில் 1,100 வடிகால்களை முழுமையாக செய்யவில்லை அதற்குரிய இணைப்புகளை கூட சரியாக செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
கடந்த எடப்பாடியார் ஆட்சியில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றினார்கள் ககன்சிங்பேடி கூட சிறப்பாக பணியாற்றினார் அவரை கூட இந்த பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. அம்மாவுடைய ஆட்சி காலத்திலும், எடப்பாடியாரின் ஆட்சிக்காலத்தில் வெள்ள நிவாரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு எல்லாம் அன்றைக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.அதேபோல் சமுதாய கிச்சன் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அது குறித்து முதலமைச்சருக்கு எந்த விவரமும் தெரியவில்லையா அல்லது தெரிந்து கொண்டே நீங்கள் அது தெரியாதது போல் இருக்கீறாரா?
இந்த மிக்ஜாம் புயலிருந்து இந்த நான்கு மாவட்டங்களில் இந்த மக்களை காப்பாற்றமுடியாத நீங்கள் எப்படி 38 வருவாய் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தால் எப்படி மக்களைக் காப்பாற்றுவீர்கள். என்பதுதான் இன்றைக்கு மிக பெரிய அச்சமாக இருக்கிறது. மழைநீர் வடிகால் பணிக்கு 4000 கோடியை செலவு செய்ததாக கூறப்பட்டுள்ளது அதற்கு வெள்ளை அறிக்கை விட வேண்டும் தற்போது மத்திய அரசுக்கு நிதியை அறிவித்துள்ளது அந்த நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *