• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிளாம்பாக்கம் அருகே புதிய ஆம்னி பேருந்துநிலையம்..!

Byவிஷா

May 15, 2023

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தை சென்னை மாநகரில் இருந்து பயணிகள் எளிதாக வந்தடைவதற்காக மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதோடு புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும் அமைய இருக்கிறது. இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவர் அமைச்சர் சேகர் பாபு தற்போது ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது கிளாம்பாக்கம் அருகே மாற்றப்படும் தனியார் பேருந்து நிலையத்திற்காக நகரமைப்பு நிபுணர்கள் குழு 5 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு ஆம்னி பேருந்து நிலையத்தை 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வரதராஜபுரம் ரிங் ரோடு பகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் தனியார் பேருந்துகளில் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.