• Sat. Apr 27th, 2024

சிஎஸ்கே அணியின் ஸ்பான்சரான பெரிய நிறுவனம்..!

Byவிஷா

Nov 24, 2021

தனியார் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீரர்களின், அணியின் பெர்பாமன்ஸ்தான் அதன் பிராண்ட் வேல்யூவை அதிகரிக்கும் அந்த வகையில் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தொடர் பெர்பாமன்ஸ் மற்ற அணிகளை விட அதன் வணிக மதிப்பை, பிராண்ட் வேல்யூவை அதிகரித்தது. இதற்கு முக்கியக் காரணம் ‘தல’ என்று செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனிதான்.


இருசக்கர, மூன்று சக்கர வாகன டயர் உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் யூரோகிரிப் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் முதன்மை ஸ்பான்சராக ஒப்பதம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொகை ரூ.100 கோடியையும் தாண்டியது. ஐபிஎல் அணியான தோனி தலைமை வகிக்கும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ். சிஎஸ்கே அணியின் ஸ்பான்சர்களாக டிவிஎஸ் யூரோகிரிப் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . டிவிஎஸ் யூரோகிரிப் நிறுவனத்தின் ஜெர்சியில் இந்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இதுதான் டிவிஎஸ் குழுமம் ஒன்று முதல் முறையாக ஐபிஎல் அணி ஒன்றுக்கு ஸ்பான்சர் செய்யும் தருணமாகும். டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்துக்கு மதுரை, உத்தராகண்டின் ருத்ராபூரில் கிளைகள் உள்ளன. இதில் மாதம் ஒன்றிற்கு 30 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதற்கான உற்பத்தித் திறன் உள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய பிராண்ட் மதிப்பு 900 மில்லியன் டாலர்களாகும். ஐதாட் நிதி ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் ஷியாம் சேகர் ஒருமுறை ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “இந்தியா சிமெண்ட்ஸ் அதன் பங்கு தாரர்களுக்கு நிறைய சம்பாதித்துத் தருகிறது. சிஎஸ்கேவின் வணிக ஆற்றல் எக்கச்சக்கம். கிரிக்கெட்டின் மான்செஸ்டர் யுனைடெட் என்றே சிஎஸ்கேவை அழைக்கலாம்” என்றார்.


ஆனால் சிஎஸ்கே அணி பெரிய பிரச்சனையில், ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது அதன் வணிக மதிப்பு குறைந்தது. ஆனால் 2018-ல் அணி திரும்பி வந்து மீண்டும் கலக்கத் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கேவின் வணிக மதிப்பு மீண்டும் எகிறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *