• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை வந்த தங்கலான் படக்குழுவினர்

BySeenu

Aug 10, 2024

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பசுபதி, நடிகைகள் மாலவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு பிரமோசன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கலான் பட குழுவினர்களான விக்ரம், டேனியல், நடிகை பார்வதி, மாலவிகா மோகனன் ஆகியோர் ரசிகர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்தனர்.

அப்போது இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட போது இருந்த அனுபவங்களை தனிதனியே பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மேலும் இந்த படம் பார்போர்க்கு நிச்சயமாக பிடிக்கும் எனவும், அனைவரும் கஷ்டப்பட்டு நடித்துள்ளதாக கூறினர். மேலும் படப்பிடிப்பின் போது மக்கள் கூறிய பல்வேறு தகவல்களை படத்தில் சேர்த்துள்ளதாக தெரிவித்தனர்.