தமிழ் நாடு அரசு சட்டமன்ற பேரவை குழு தலைவர் வேல்முருகன் (பண்டுருட்டி)
மாங்குடி ( காரைக்குடி) அருண்(சேலம் மேற்கு) குழுவினர் கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடிப் பாலத்தை ஆய்வு செய்தனர், உடன் குமரி ஆட்சியர் அழகு மீனா, மற்றும் வருவாய் துறை, சுற்றுலா துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிகாரிகள். கண்ணாடிப் பாலம் பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தின் பொறியாளர் உடன் இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் உயரமான ஆங்கிள் பணியின் போது சுற்றியல் தவறி விழுந்ததால் கண்ணாடியில் ஏற்பட்ட கீறல் விழுந்த கண்ணாடி மாற்றப்பட்டு, புதிய கண்ணாடி பொருத்தப்பட்தையும் பாலத்தின் மேற்பகுதி மற்றும் பாலத்தின் இருபக்கங்களின் இரும்பில் வர்ணம் பூசும் பணியையும், சட்டமன்ற குழு தலைவர் முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி, அருண், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனை அடுத்து கன்னியாகுமரி தமிழ் நாடு அரசு சட்டமன்ற பேரவை குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தவை
நான் கடந்த 2006,2007,2025(நடப்பாண்டில்) என மூன்று குழுவின் சார்பில் கன்னியாகுமரி வந்துள்ளது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு.
இரண்டு தினங்களுக்கு முன் சுற்றியல் கண்ணாடிப் பாலத்தின் ஒரு கண்ணாடியின் மேல் விழுந்ததில் சிறிய கீறல் ஏற்பட்டது, இப்போது குறிபிட்ட கண்ணாடி மாற்றப்பட்டு எப்போதும் போன்று சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறது.

குமரி மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தமிழ் சான்றோர்கள்,தமிழ் அறிஞர்கள். படகில் நேரடியாக (விவேகானந்தர் மண்டபம்) செல்லாது நேரடியாகவே திருவள்ளுவர் சிலை பாறைக்கு செல்ல படகு வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டம் சென்னையில் நடக்கும் போது அதில் பேசி முடிவெடுப்போம் என தமிழ் நாடு சட்டமன்ற பேரவை குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பெரியநாயகி தெரு பகுதியில் கடலில் நடக்கும் தூண்டில் பாலம் மற்றும் பள்ளம் துறை கடற்கரை, நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவ மனையையும் பார்வையிட்டபின் ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் நடக்க உள்ளது.
தமிழ் நாடு சட்டமன்ற குழு பார்வையிட்ட. திருவள்ளுவர் சிலை பாறை, கண்ணாடிப் பாலம், பெரிய நாயகி தெரு தூண்டில் பாலம் பணி, பள்ளம் துறை கடற்கரை ஆகிய இடங்களுக்கு உடன் சென்றார்.