அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம் என்ற சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமம் என்பதை வலியுறுத்தும் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் மக்களை பாதுகாக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு மதுரையில் நடைபெற்ற அரசியல் சாசன தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கையில் அரசியல் சாசன சட்ட புத்தகத்தை எடுத்துச் சென்று உரையாற்றிய பின்னர். இந்த அரசியல் சாசன புத்தகம் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
மதுரை மருத்துவ சங்க கட்டிட வளாகத்தில் அரசியல் சாசனம் ஓர் வாழும் ஆவணம் என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இந்தியாவுக்கான மக்கள் இயக்கம் மற்றும் மதுரை நகர அனைத்து தொழிற்சங்கம் சார்பாக இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் என்.பி ரமே~; கண்ணன் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.லெனின் சோகோ அறக்கட்டளை இணை இயக்குனர் எஸ்செல்வ கோமதி மற்றும் எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசியல் சாசனத்தை பாதுகாத்திட உறுதியேற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு சிறப்புரையாற்றுகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் அனைவருக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை இந்தியா மதச்சார்ப்பற்ற போன்ற ஒப்பற்ற நிலைப்பாடுகளை டாக்டர். அம்பேத்கர் தலைமையிலான குழு இந்த அரசியலமைப்பு சாசன சட்டத்தை உருவாக்கியது.
இந்த அரசியல் சாசன சட்டம்தான் ஓர் வாழும் ஆவணமாக திகழ்கிறது.
இந்த அரசியல் சாசன சட்ட புத்தகத்தை தனது கையில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் வயநாடு எம்.பியாக பதவியேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதவியேற்பு உறுதி மொழி ஏற்றார்.
பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி தனது கையில் அரசியல் சாசன சட்ட புத்தகத்தை வைத்து உரையாற்றிய பின்னர், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை வெளியிடும் புத்தக பதிப்பாளர் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் அரசியல் சாசன புத்தகம் சமீபத்தில் ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
சகோதரத்துவம் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நமது அரசியலமைப்பு சாசன சட்டம் ஒப்பற்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அனைவரும் சமம் என்பதை உறுதிபடுத்தும் இந்த அரசியலமைப்பு சாசன சட்டம் ஓர் மக்களை பாதுகாக்கும் ஓர் பாதுகாப்பு ஆயுதம் ஆகும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.