அரியலூர் மேல தெருவில் எழுந்தருளி அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 29ஆம் தேதி மங்கள இசை, தீப வழிபாடு, கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது,யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டு மகாதீப ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று , தொடர்ந்து வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்திய இசையுடன் நேற்று கடம் புறப்பாடு செய்யப்பட்டு புனித கும்ப நீரை ராஜகோபுரம், மூலவர் உற்சவர் மற்றும் பரிவார தெய்வங்கள் மீது ஊற்றப்பட்டு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தேறியது.
விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் திருப்பணி கமிட்டினர் மற்றும் அருள்மிகு படைபத்து மகா மாரியம்மன் சேவா டிரஸ்ட்,உபயதாரர்கள் மற்றும் மேல தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)