• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

15 மீனவர்களுக்கு பரிசல்களை வழங்கிய ஆட்சியர்..,

BySeenu

Jul 12, 2025

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன் பிடி பரிசல்களை 15 மீனவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வழங்கினார். இதில் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கம், மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்கம்,கோவை வட்ட மீனவர் சங்கம் ஆகிய சங்கத்தை சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டது.

பரிசலின் விலை 18,500 ரூபாயாகவும் இதிலிருந்து மீனவர்களுக்கு 50% மானிய விலையில் 9,250 ரூபாய் தொகையை மீன்வளத்துறை சார்பாகவும் மீதமுள்ள 50% பணத்தை மீனவர்கள் செலுத்தி உள்ளனர்.இந்த பரிசல் ஈரோடு மாவட்டத்திற்கு 15 பரிசல்கள்,திருப்பூர் மாவட்டத்திற்கு 15 பரிசல்கள்,ஈரோடு மாவட்டத்திற்கு 30 பரிசல்கள் என மொத்தம் 60 பரிசல்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த பரிசலானது சேலம் மாவட்டம் மேட்டூரில் தயாரிக்கப்பட்டு பின்னர் வாகனம் மூலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.