அரியலூர் மாவட்டம் ,ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட ,ஆண்டிமடம் காட்டாத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகாமினை,மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு,பல்வேறுஊராட்சி ஒன்றியம், காட்டாத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும்,மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூபாய் 9.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கியும்,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் தனிக்கை) பழனிசாமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர் ஷீஜா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரேமா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் (வ.ஊ),அன்புச்செல்வன் (கி.ஊ),ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆர்.கலியபெருமாள் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
