நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை, பாப்பம்பாளையம், ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோயில் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், முன்னணியில் 500 -க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.


உடன் பள்ளிபாளையம் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், வட்டாட்சியர் சிவக்குமார், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரி கிரிஜா, 15க்கும் மேற்பட்ட அரசு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


