• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்வுக்கு சென்ற மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!..

Byமதி

Oct 2, 2021

சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது கேரளாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார். இவர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அபிஷேக் என்ற நபர் கல்லூரி வளாகத்திற்குள் வைத்து அந்த மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,