திருப்பரங்குன்றம் மலையினால் சர்ச்சை ஏற்படுத்தும் மத பிரிவினை சக்திகளுக்கு மத்தியில் “முன் மாதிரியாக ” பார்வையற்றோர் “மத நல்லிணக்க உறுதி மொழி ” எடுத்தனர்.
மதுரை தோப்பூர் பார்வையற்றோர் குடியிருப்பு வளாகத்ததில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம். பார்வையற்றோர் சங்கம் சார்பில் ஜாதி, மத, நல்லிணக்கம் வேண்டி உறுதிமொழி எடுத்தனர்.
மதுரை தோப்பூர் புதுப்பட்டியில் உள்ள பார்வையற்றோர் குடியிருப்பு வளாகத்தில் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பார்வையற்றோர் நல சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார்.

சங்க செயலாளர் முத்து கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளார் கோவிந்தராஜ் வரவேற்ரை கூறினார்.
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் குடியரசு தின தேசிய கொடியை ஏற்றி வைத்து, பார்வையற்றோர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் பார்வையற்றோர் நலச் சங்க உறுப்பினர்களிடம் பேசும் போது 76 வது குடியரசு தின விழாவில் உங்களுடன் கலந்து கொள்வதில் பெருமை முயற்சி அடைகிறேன். ஒற்றுமையாக செயல்படுங்கள் ஜாதி, மத பேதமில்லாமல் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்படுங்கள் என கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் நீதி மன்ற வழக்கறிஞர் இள மகிழன் கலந்து கொண்டு சாதி, மத, இனம், மொழி பேதமின்றி செயல்பட நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக மலையை சுற்றி இந்து, முஸ்லீம் சர்ச்சைகள் எழும்பியுள்ள நிலையில் பார்வையற்றோர் சங்கம் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்து மதபிரவினை வாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளனர்.
